சென்னை : நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்
பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி, இன்று அதிகாரபூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜகவில் இணைந்துகொண்டார்.
நடிகை கஸ்தூரியின் இந்த அரசியல் பிரவேசம், தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்து வந்த கஸ்தூரி, பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு மேலும் ஒரு பிரபல முகத்தை வழங்கியுள்ளது.

0 Comments