ADS

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு வந்தவர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு.....!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு வந்திருந்த சில குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக அளித்துள்ளார். இந்த வாட்ச்கள் அனைத்தும் விருந்தினர்களுக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த வாட்ச்களை Audemars Piguet நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.



இந்த வாட்ச்களில் 41 எம்எம் 18 கேரட் பிங்க் கோல்டு கேஸ் உடன் 9.5 எம்எம் திக்கான கிரிஸ்டல் சபையர் பதிக்கப்பட்டு இருந்தன. பிங்க் கோல்டு டோன் கொண்ட கிராண்டு டாபிசெரி பேட்டர்ன் டயல்கள் கொண்டுள்ளன. ரன்வீர் சிங், ஷிகர் பஹாரியா, வீர் பஹாரியா உள்ளிட்டோருக்கு இந்த வாட்ச்கள் பரிசாகத் தரப்பட்டுள்ளன.


ஆசியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூடிகல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான வீரெண் மெர்ச்சன்டின் இளைய மகளுமான ராதிகா மெர்ச்சன்டுக்கும் ஜூலை 12 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள பாந்த்ரா- குர்லா காம்ப்ளெக்ஸின் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


இதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர், போரிஸ் ஜான்சன், மல்யுத்த வீரர் ஜான் சீனா, திரையுலகப் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரஜினிகாந்த், எம்எஸ் தோனி, ஏஆர் ரகுமான், பிரியங்கா சோப்ரா, கிம் கதார்ஷியான், கோலே கதார்ஷியான் உள்பட ஏராளமான பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர்.


இதில் குறிப்பிட்ட சில விருந்தினர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பரிசாக அளிக்கப்பட்டன. திருமணத்துக்கு மறுநாள் நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டை வாழ்த்தினார். 


ஜூலை 14 ஆம் தேதியன்று நடைபெற்ற திருமண வரவேற்புடன் திருமண நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. கடந்த மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நடைபெற்ற திருமண முன்வைபக நிகழ்ச்சிகள் அனைத்தும் மறக்க முடியாதவையாக அமைந்தன.


Post a Comment

0 Comments