ADS

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி

 சென்னை: முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.



இம்மாதம் அமெரிக்கா செல்ல, அவர் திட்டமிட்டிருந்தார்; பின்னர் தேதி மாற்றப்பட்டது. சுதந்திர தினத்தன்று கோட்டையில், முதல்வர் கொடியேற்ற உள்ளார். அதற்கு பின், ஆக., 22ல் அவர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.


முதல்வர் வெளிநாடு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 15 நாட்கள் வெளிநாடு சென்று வர, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்; உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments