ADS

கொடைக்கானலில் அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம்.. கேரளா இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடம்

கொடைக்கானலில் அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம்.. கேரளா இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடம்

 கொடைக்கானல் பக்கத்தில அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அந்த இடம் கேரள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இயற்கை அத்தனை அழகையும் அங்கே ஒளித்து வைத்து இருக்கிறது. அந்த இடத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.
தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் பகுதி கொடைக்கானலில் இருக்கிறது. இந்த ஏரியாவிற்கு இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுமே அவ்வளவு எளிதாக போய்விட முடியாது. கூகுளில் கொடைக்கானல் டூ மூணாறு பாதையை போட்டீர்கள் என்றால், தேனி, போடி, வழியாக காட்டும். அதை பாதையை நடந்து செல்லும் வழி என்று போட்டீர்கள் என்றால். பூம்பாறை, மன்னவனூரை அடுத்த கடவேரி வழியாக வட்டவடாவை அடைந்து அங்கிருந்து டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணையை அடைந்து மூணாறு போக முடியும்.

எளிதான இந்த பாதை 1990களில் மூடப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில், கொடைக்கானல் அருகே கிளாவரையில் இருந்து கேரள மாநில எல்லையில் உள்ள கடவேரி வரை ஜீப்பில் போய்விட முடியும். ஆனால் அதன்பிறகு கொட்டக்கம்பூர் வரை உள்ள 8 கிலோ மீட்டர் தூரம் பாதை இல்லை.. பாதை பல இடங்களில் சேதம் அடைந்து பயணிக்கவே முடியாத நிலையில் இருக்கிறது. அதை தாண்டி வந்தால் வட்டவாடா என்ற கிராமம் இருக்கிறது. அதாவது கடவேரியில் இருந்து 11.5 கிமீ தூரம் வரை தள்ளி உள்ள வட்டவடாவிற்கு சரியான பாதை இல்லை..

அதேநேரம் கேரளாவின் மூணாறு வழியாக வட்டவடாவிற்கு போக முடியும். வட்டவடாவும், அந்த வழியாக கடவேரி சென்று கொடைக்கானல் செல்லும் திரில்லிங்கான பாதையும் கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். பலரும் வந்து செல்லும் பகுதி என்றாலும், வட்டவடாவிற்கோ அல்லது கொட்டக்கம்பூருக்கோ வனத்துறை அனுமதி இல்லாமல் வாகனத்தில் போக முடியாது. அதேபோல் கொட்டக்கம்பூரில் இருந்து வனத்துறை அனுமதி இல்லாமல் நடந்து கூட கடவேரி போக முடியாது. அதேபோல் தமிழ்நாட்டின் கிளாவரையில் இருந்து கேரள மாநிலம் கிளாவரைக்கும் வனத்துறை அனுமதி இல்லாமல் போக முடியாது.

இதில் முக்கியமான வியூ பாய்ண்டான வட்டவடாவிற்கு வனத்துறை அனுமதியுடன் போக முடியும். வட்டவடா என்பது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியாகும். வட்டவடாவில் தங்க வேண்டும் என்றால் அங்கு ரூம் எடுத்திருக்க வேண்டும். அப்போது தான் அனுமதிப்பார்கள்..

மூணாறில் இருந்து டாப் ஸ்டேசன் வருபவர்கள் அங்கிருந்து இரண்டு செக் போஸ்டை கடந்து வர வேண்டியதிருக்கும். போய்விட்டு உடனே வருவது என்றால் அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் ரூம் எடுத்திருந்தால் மட்டுமே தங்கி சுற்றி பார்க்க அனுமதிப்பார்கள். தட்டு தட்டுக்களாக அல்லது படிக்கட்டு படிக்கெட்டாக உள்ள நிலங்களில் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். மிக அமைதியாக அற்புதமான கிராமம் தான் வட்டவடா.. வட்டவடாவில் அருவி உள்ளது.

அதேபோல் நிறைய பழத்தோட்டங்கள் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்டாபெரி பழ தோட்டம் மிகவும் பிரபலம் ஆகும். தங்கும் விடுதிகள் பல மலைகளின் சரிவில் அற்புதமாக அமைந்துள்ளது. இங்குள்ள எல்லா இடங்களுமே இயற்கை அப்படியே உள்ள இடங்கள் ஆகும். இந்த இடத்திற்கு கேரள மக்கள் அதிகம் பேர் வந்து செல்கிறார்கள். கொடைக்கானல் வழியாக போக முடியாது என்பதால் பலரும் மூணாறு வழியாக வருகிறார்கள். ஒருமுறையாவது போக வேண்டிய இடம் ஆகும்.

Post a Comment

0 Comments