ADS

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தொடர்கிறார் அஜித் தோவல்

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அஜித் தோவல், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அஜித் தோவலின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவரது பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Post a Comment

0 Comments