ADS

மக்கள் சேவகராக இளையராஜா புதிய அவதாரம் : அண்ணாமலை வாழ்த்து

நாளை (25.7.22) மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ள இளையராஜாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய திரை உலகில் இசை ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வந்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பாகுபலி & ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், தர்மசாலா கோயிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகியோர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற நிலையில் இசைஞானி இளையராஜா பதிவி ஏற்கவில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் அவரால் பதவி ஏற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ள அவர் நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் இதற்காக அவர் இன்று டெல்லி சென்றார்.

 இந்நிலையில் இளையராஜாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள திரு.அண்ணாமலை அவர்கள் எம்பியாக பதவி ஏற்பதற்கு டெல்லி வந்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மக்கள் சேவகராக புதிய அவதாரம் எடுத்துள்ள இளையராஜா இந்த பணியில் அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துவதாகவும் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments