ADS

டெல்லி பயணம் பாதியில் ஓடிவரும் இபிஎஸ்

டெல்லிக்கு நான்கு நாட்கள் பயணமாக சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களிலேயே சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை அன்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை மரியாதையை நிமித்தமாக சந்தித்தார். வரும் திங்கள்கிழமை அன்று நடைபெறும் திரௌபதி முர்மு அவர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி, அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் முதலான காரணங்களால் அவருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.. இதனால் தனது டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments