ADS

" மனோ தங்கராஜ் கூறுவதை நம்பாதீர்" முதல்வருக்கு பொன் ராதாகிருஷ்ணன் அறிவுரை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விஷயத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுவதை முதல்வர் ஸ்டாலின் நம்பக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.
அவர் கூறியதாவது: 
 கடந்த 2013ல் தொடங்கி 2019 வரை நடந்த கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இதில் விவாதத்தை துவங்கி உள்ளார். இத்திட்டத்தில் துவக்கம் முதல் இறுதி வரை தவறுகள் நடந்துள்ளன என்றும் கூறியுள்ளார். ஒரு திட்டம் உருவாக்கப்படும் போது மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் எவ்வளவு நாளில் கிடைக்கும் அதனால் ஏற்படும் பாதிப்பை எப்படி குறைப்பது என திட்டமிடப்படும். இத்திட்டத்தில் மக்களின் நிலம் 17.6 சதவீதம் மட்டும் தான். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு முறையும் முதல்வரையும் சம்பந்தப்பட்ட அமைச்சரையும் சந்தித்து மண் எடுக்க அனுமதி பெற்றேன். பிரதமர் வாஜ்பாய் காலத்தில் உருவாக்கப்பட்டு, மோடி ஆட்சியில் முடிக்க வேண்டிய திட்டத்திற்கு தமிழக அரசு மண் தர வேண்டும் அல்லது "நெல்லை எங்கள் எல்லை குமரியங்கள் தொல்லை" என கருணாநிதி கூறியது போல அறிவிக்க வேண்டும்.

 100% படித்த குமரி மாவட்ட மக்களின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் அமைச்சர் மனோ தங்கராஜை நம்பாமல் முதல்வர் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

 சென்னை - தூத்துக்குடி கடற்கரைச் சாலை திட்டம் குமரி மாவட்டத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments