வாரணாசி: 2006-ல் வாரணாசியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கராவதி வலியுல்லா கானுக்கு காசியாபாத் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாரணாசியில் ரயில்நிலையம், மற்றும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கரவாதி முகம்மது வலியுல்லா கான் 2006 ஏப்ரலில் கைது செய்யப்பட்டான். உ.பி. மாநிலம் காசியாபாத் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 4-ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகம்மது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது. இன்று நடந்த விசாரணையில் வலியுல்லாகானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

0 Comments