மாஸ்கோ: ரஷ்யா அவ்வப்போது பிரிட்டனுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவை ஒட்டியுள்ள கிரீமியா தீபகற்பத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஓர் போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்தது. இதனை அடுத்து ரஷ்யா கடலில் குண்டுகளை வீசியது. இது பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசை ஆத்திரமடையச் செய்தது.
இதுகுறித்து முன்னதாக நடைபெற்ற ரஷ்ய கடற்படை தின நிகழ்ச்சிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றினார். கடலுக்கு அடியிலும், கடலுக்கு மேலும், வான்வெளியிலும் எந்த எதிரி எங்கு நடமாடினாலும் எதிர்பாராவிதமாக தாக்கக் கூடிய வல்லமை ரஷ்யாவுக்கு உண்டு என்று புடின் தெரிவித்தார். இதன மூலமாக பிரிட்டனின் அத்துமீறலை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை பிரிட்டன் மறுத்துள்ளது. தங்களது போர்க்கப்பல் தீபகற்பத்தில் பயணிக்கும்போது எந்த அணுகுண்டும் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய கிரிமியா தீபகற்ப பகுதியை கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றியது.
ஆனால் இன்னமும் இந்த தீபகற்பம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமானது என்று பிரிட்டன் நம்பி வருகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் பிரிட்டன் போர்க்கப்பல்கள் அவ்வப்போது உலா வருகின்றன. தங்களுக்கு சொந்தமான பகுதியில் அவ்வப்போது பிரிட்டன் கடற்படை அத்துமீறி வருவது விளாடிமிர் புடின் அரசை அதிருப்தி அடைய செய்துள்ளது.
ஹெச்எம்எஸ் டிபன்டர் என்கிற பிரிட்டன் போர்க்கப்பல் ரஷ்ய கடல் எல்லைக்குள் அவ்வப்போது உலா வருகிறது. 'கடந்த மாதம் இதே போன்று இந்த போர்க்கப்பல் அத்துமீறியது. ரஷ்யா நினைத்திருந்தால் இந்த கப்பலை அடியோடு அழித்து இருக்க முடியும். மூன்றாம் உலகப்போருக்கு பிரிட்டன் வித்திடாமல் இருந்தால் நல்லது' என விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.பிரிட்டனின் இந்த கடல் எல்லை அத்துமீறலுக்கு அமெரிக்காவும் மறைமுக தூண்டுகோலாக அமைகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments