புதுடெல்லி: இந்தியாவில் 'வைரம்' என்ற வார்த்தையை வெட்டியெடுக்கப்படும் இயற்கை கற்களுக்கு மட்டுமே பயன்படுத்த இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) முடிவு செய்துள்ளது. இயற்கை வைரங்களுக்கும் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்களுக்கும் இடையிலான குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கையாக வளர்க்கப்படும் வைரங்களை 'வைரம்' என்று அழைப்பது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய டவடிக்கை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது.......
இனிமேல், செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்களை 'ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரம்' அல்லது 'ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரம்' என்று முழுமையாக விவரிக்க வேண்டும். இயற்கை வைரங்களை விட மலிவான ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழ்நிலையில், உண்மையான வைரங்களின் மதிப்பைப் பராமரிக்க மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள BIS இந்த மாற்றத்தைக் கொண்டுவருகிறது.
இந்த முடிவு வைர வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், ஏற்றுமதி ஆவணங்களில் துல்லியத்தை உறுதிப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய நடவடிக்கை, சாதாரண மக்கள் வைரங்களை வாங்கும் போது அவை இயற்கையானவையா அல்லது ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டவையா என்பதை அடையாளம் காண உதவும்.
0 Comments