ADS

தமிழகத்தில் தேசிய ஜனநயாகக் கூட்டணி பிரசாரம்: பிரதமர் இன்று துவக்கம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் சென்னை வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநயாகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநயாகக் கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மதுராந்தகத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, இன்று பிற்பகல், 2:15 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகம் செல்கிறார். பொதுக்கூட்ட மேடைக்கு, மாலை 3:15 மணிக்கு மோடி செல்கிறார். கூட்டத்தில் அவர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து, பிரசாரத்தை துவக்கி வைக்கிறார்.

கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து, விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறார்.

Post a Comment

0 Comments