ADS

முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம் : நெல்லையில் அண்ணாமலை பேச்சு

 திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது

சண்டை என்று வரும்போது படைத்தளபதிகள் முன்னின்று சண்டை நடத்துவார்கள். பாஜவின் பூத் தலைவர்கள் பூத் பொறுப்பாளர்கள் அந்த சண்டையின் முன்புறம் இருக்கும் தலைவர்கள். 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்வதில் முதல் பங்கு உங்களுக்கு உண்டு.


பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். அடுத்த 8 மாதம் பிரதமர் மோடிக்காக, கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேஜ கூட்டணியை ஆட்சியை இபிஎஸ்சை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேஜ கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும் உண்டு. அதனை வெற்றிகரமாக செய்து முடித்து காட்ட வேண்டும். 4 ஆண்டுகாலம் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். திமுக ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாஜ நின்றுள்ளது.

பாஜவின் நபர்கள் கைது செய்து சிறை சென்றுள்ளோம். மக்களுக்காக போராட்டம் நடத்தி உள்ளோம். 14 முதல் 30 நாள் சிறையில் இருந்துள்ளீர்கள். இந்த 8 மாத காலம் இந்த உழைப்புக்கு ஊதியமாக கடுமையாக உழைத்து தேஜ கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தை பார்த்து பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு இருக்கும் முதல்வரை நிரந்தரமாக பயமில்லாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Post a Comment

0 Comments