அடுத்தடுத்து அதிர்ச்சி விக்கிரவாண்டி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி?? 10 நாளில் ஏழு தற்கொலை முயற்சிகள்!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 7 தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மாணவிக்கு நீதி கேட்டு சுமார் பத்து நாட்களாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் உயர் நீதிமன்ற அறிவுரைப்படி மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்துள்ளனர். மாணவி மரணம் அடைந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கீழச்சேரி பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் கிழக்கு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் மேல் அதிர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி அருகே உள்ள கல்வி கொடுக்கும் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் வழக்கம்போல் என்று கூறி வந்த நிலையில் திடீரென கல்லூரியின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இதுதொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் கல்வி நிறுவனங்களை வைத்து தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது கள்ளக்குறிச்சி சின்ன சேலம் மாணவி மரணம் சேலம், காஞ்சிபுரம், கடலூர் மாணவர்கள் தற்கொலை முயற்சி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, காலையில் திருவள்ளூர் மாணவி தற்கொலை தொடர்ந்து விழுப்புரம் மாணவி தற்கொலை என அடுத்தடுத்து தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி களால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

.jpg)
0 Comments